• சுய உதவி

பயிற்சி கையேடு

1 தொலைக்காட்சி சேனல் டிஸ்ட்ரிபியூட்டர்களின் பெயர் மற்றும் முகவரி:

Dish TV India Limited,
Registered Office: Office No. 3/B, 3rd Floor, Goldline Business Centre, Link Road, Malad West, Mumbai 400064, Maharashtra
Corporate Office: FC-19, Film City, Sector 16 A, Noida, 201301

2 தொலைக்காட்சி சேனலின் டிஸ்ட்ரிபியூட்டர் வழங்கும் சேவையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்: இங்கே கிளிக் செய்க

3 நோடல் அதிகாரியின் பெயர், பதவி மற்றும் இமெயில், தொலைபேசி எண், ஃபேக்ஸ் எண் மற்றும் முகவரி: விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க

4 இந்த ஒழுங்குமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி நுகர்வோர் பாதுகாப்பிற்கான விதிகளின் விவரங்கள்:-
 

a.தொலைக்காட்சி தொடர்பான ஒளிபரப்பு சேவைகளின் இடையூறு.— ஒரு சப்ஸ்கிரைபரின் தொலைக்காட்சி சேனல்களின் சிக்னல் எழுபத்தி இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக தொடர்ந்து இடையூறு ஏற்பட்டால், தொலைக்காட்சி சேனல்களின் டிஸ்ட்ரிபியூட்டர், அத்தகைய சேனல்களை பொறுத்து இடையூறு ஏற்பட்ட நேரம் முழுவதிற்கும் சப்ஸ்கிரைபரின் சப்ஸ்கிரிப்ஷன் கட்டணங்களை டிஸ்ட்ரிபியூட்டரின் சில்லறை விலை மற்றும் நெட்வொர்க் கெப்பாசிட்டி கட்டணத்தின் விகிதாசாரத்தில் இருக்கும் தொகைக்கு சமமான அளவுக்கு குறைப்பார்:

சப்ஸ்கிரைபர் புகாரை பதிவு செய்த நேரத்திலிருந்து அத்தகைய இடையூறுக்கான நேரம் கணக்கிடப்படுகிறது:

மேலும், ஒருவேளை இடையூறானது இயற்கை சீற்றத்தின் காரணமாக ஏற்பட்டிருந்தால் இந்த துணை-ஒழுங்குமுறையில் உள்ள எதுவும் பொருந்தாது என்று குறிப்பிடப்படுகிறது.

b. சப்ஸ்கிரைபர்களுக்கான விலை பாதுகாப்பு.— ஒரு வேளை, தொலைக்காட்சி தொடர்பான ஒளிபரப்பு சேவைகளை ஒரு சப்ஸ்கிரைபர் லாக்-இன் காலத்திற்குள் பெற்றிருந்தால் அல்லது தொலைக்காட்சி சேனல்களின் டிஸ்ட்ரிபியூட்டர்கள் வழங்கும் எந்தவொரு திட்டத்தையும் பெறுவதற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சப்ஸ்கிரைபர் தொலைகாட்சி தெடர்பான ஒளிபரப்பு சேவைகளின் சப்ஸ்கிரிப்ஷன் கட்டணங்களை முன்கூட்டியே செலுத்தியிருந்தால், டிஸ்ட்ரிபியூட்டர் அத்தகைய சேவைகளை குறிப்பிட்ட காலத்திற்கு சப்ஸ்கிரிப்ஷன் விலையை உயர்த்தாமல் மற்றும் சப்ஸ்கிரைபருக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் சப்ஸ்கிரிப்ஷனின் மற்ற விதிமுறைகளை மாற்றாமல் சப்ஸ்கிரைபருக்கு தொடர்ந்து வழங்க வேண்டும்.

d. தொலைக்காட்சி தொடர்பான ஒளிபரப்பு சேவைகளின் துண்டிப்பு.—

(1) தொலைக்காட்சி சேனல்களின் ஒவ்வொரு டிஸ்ட்ரிபியூட்டரும், சப்ஸ்கிரைபரின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அத்தகைய சப்ஸ்கிரைபரருக்கு, அவர் தன் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ள தேதியிலிருந்து, தொலைக்காட்சி தொடர்பான ஒளிபரப்பு சேவைகளை துண்டித்து விட வேண்டும் மற்றும் சேவைகள் வழங்குவதற்காக டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் சப்ஸ்கிரைபரால் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, சப்ஸ்கிரைபர் செலுத்திய டெபாசட் தொகையை டிஸ்ட்ரிபியூட்டர் அவருக்கு ஏழு நாட்களுக்குள் திருப்பி செலுத்திவிட வேண்டும்: இணைப்பபை துண்டிக்க வேண்டிய தேதியிலிருந்து குறைந்தபட்சம் பதினைந்து நாட்களுக்கு முன்னதாக இணைப்பை துண்டிப்பதற்கான கோரிக்கையை சப்ஸ்கிரைபர் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.

(2) தொலைக்காட்சி சேனல்களின் எந்தவொரு டிஸ்ட்ரிபியூட்டரும் குறைந்தபட்சம் பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே இணைப்பு துண்டிக்கப்படுவதற்கான அறிக்கையை அதற்கான காரணத்துடன் சப்ஸ்கிரைபருக்கு வழங்காமல் தொலைக்காட்சி தொடர்பான ஒளிபரப்பு சேவைகளை துண்டிக்கக்கூடாது மற்றும் அத்தகைய அறிக்கையை சப்ஸ்கிரைபருக்கு வழங்கிய தேதியிலிருந்து இணைப்பு துண்டிக்கப்படுவதற்கான பதினைந்து நாட்கள் கணக்கிடப்பட வேண்டும்.

(3) துணை ஒழுங்குமுறை (2) இல் குறிப்பிடப்பட்டுள்ள தொலைக்காட்சி தொடர்பான ஒளிபரப்பு சேவைகளைத் துண்டிப்பதற்கான அறிவிப்பு தொலைக்காட்சித் திரையில் காண்பிப்பதன் மூலமும், சந்தாதாரரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுகிய செய்தி சேவையை (எஸ்எம்எஸ்) அனுப்புவதன் மூலமும் தொலைக்காட்சி சேனல்களின் டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் தெரிவிக்கப்படும்

மேலே குறிப்பிட்டுள்ள முறைகளுடன், கூடுதலாக வேறு வழிமுறைகளின் மூலமாகவும் உதாரணமாக இ-மெயில், பி-மெயில் மற்றும் பொருத்தமானதாக கருதப்படக்கூடிய பிற முறைகளின் மூலமாகவும் அறிக்கையை சப்ஸ்கிரைபருக்கு வெளியிட டிஸ்ட்ரிபியூட்டர் அனுமதிக்கப்படுகிறார்.
 

e. ப்ரீ-பெய்டு பில்லிங் மற்றும் பணம்செலுத்தல்.—
(1) தொலைக்காட்சி சேனல்களின் ஒவ்வொரு டிஸ்ட்ரிபியூட்டரும், ப்ரீ-பெய்டு கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில், சப்ஸ்கிரைபர்களின் அத்தகைய கட்டணங்களை ஒப்புக்கொள்ள வேண்டும் மற்றும் அதன்படி சப்ஸ்கிரைபரின் மேலாண்மை அமைப்பு புதுப்பிக்கப்பட்டதை உறுதி செய்திருக்க வேண்டும்.
(2) ப்ரீ-பெய்டு கட்டண விருப்பத்தேர்வுக்கான பில்லிங் காலம் சேவைகள் ஆக்டிவேட் செய்யப்பட்டதிலிருந்து முப்பது நாட்கள் ஆகும்.
(3) தொலைக்காட்சி சேனல்களின் ஒவ்வொரு டிஸ்ட்ரிபியூட்டரும், தங்கள் இணையதளத்தில், சப்ஸ்கிரைபர்களின் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்னதான பில்லிங் மற்றும் கட்டண பதிவு விவரங்களை பராமரிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு இணையதளத்தில் தங்கள் கணக்குகளில் உள்-நுழைவதற்கான அணுகலை வழங்க வேண்டும்:
அத்தகைய பதிவு விவரங்கள் பின்வருவனவற்றின் பயன்பாட்டு விவரங்களை கொண்டிருக்கும், —
(a) நெட்வொர்க் கெப்பாசிட்டி கட்டணம்,
(b) வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட உபகரணங்களுக்கான வாடகை கட்டணங்கள், எதேனும் இருந்தால்,
(c) பில்லிங் காலத்தின் போது சப்ஸ்கிரைபர் மூலம் சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட பே சேனல்கள் மற்றும் பே சேனல்களின் தொகுப்புகளுக்கான கட்டணங்கள்,
(d) இந்த ஒழுங்குமுறை விதிகளுடன் இணக்கத்திற்கு விதிக்கப்பட்ட வேறு ஏதேனும் கட்டணங்கள் மற்றும்,
(e) பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு ஏற்ப வரிகள்.
(4) ஒரு ப்ரீபெய்டு சப்ஸ்கிரைபர் கணக்கில் இருப்புத் தொகை இல்லாத பட்சத்தில் அவருக்கான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொலைக்காட்சி சேனல்களின் டிஸ்ட்ரிபியூட்டருக்கு அனுமதி வழங்கப்படுகிறது:
ஒருவேளை சப்ஸ்கிரைபருக்கான சேவைகள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அந்த சப்ஸ்கிரைபர் டிஸ்ட்ரிபியூட்டரின் செயலிலுள்ள சப்ஸ்கிரைபராக கருதப்பட மாட்டார் மற்றும் சப்ஸ்கிரைபர் மேலாண்மை அமைப்பிலிருந்து அவரை நீக்க டிஸ்ட்ரிபியூட்டருக்கு அனுமதி வழங்கப்படும் என்று குறிப்பிடப்படுகிறது:
மேலும், சப்ஸ்கிரைபரின் கணக்கு ரீசார்ஜ் செய்யப்பட்டால், டிஸ்ட்ரிபியூட்டர் சேவைகளை திரும்ப வழங்க வேண்டும் மற்றும், ஒருவேளை அத்தகைய சேவைகள் தொடர்ந்து மூன்று மாத காலத்திற்கும் மேல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்திருந்தால் சேவைகளை திரும்ப வழங்குவதற்காக சப்ஸ்கிரைபரிடமிருந்து அந்த டிஸ்ட்ரிபியூட்டர் நூறு ரூபாய் அல்லது அதற்கு குறைவான ஒரு தொகையை மறு-செயலாக்க கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம்

5 புகாரை மறுபரிசீலனை செய்வதற்கான வழிமுறை மற்றும் முக்கியத்துவம்:
வாடிக்கையாளர் உதவி மையத்தால் கையாளப்படும் புகார்கள்.— (1) தொலைக்காட்சி சேனல்களின் ஒவ்வொரு டிஸ்ட்ரிபியூட்டரும், வாடிக்கையாளர் சேவை மையமானது ஒரு சப்ஸ்கிரைபரிடமிருந்து புகாரைப் பெற்ற உடனே அந்த புகாரை ஒவ்வொரு முறையும் பதிவுசெய்து அதற்கான டாக்கெட் எண் எனப்படும் ஒரு தனிப்பட்ட எண்ணை வழங்குகிறது என்பதை உறுதிசெய்ய வேண்டும்:
அவசியம் ஏற்பட்டால், அத்தகைய டாக்கெட் எண்களுக்கு ஒரு அட்டவணையை குறிப்பிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(2) தொலைக்காட்சி சேனல்களின் ஒவ்வொரு டிஸ்ட்ரிபியூட்டரும், வாடிக்கையாளர் சேவை மையமானது பின்வருவனவற்றை செய்யும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்-
(a) புகாரை பதிவுசெய்யும் போது, சப்ஸ்கிரைபரிடம் டாக்கெட் எண், புகார் பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரம் மேலும் எவ்வளவு நேரத்திற்குள் புகாருக்கான தீர்வு கிடைக்கும் என்பதை கூற வேண்டும்; மற்றும்
(b) புகாருக்கான தீர்வின் போது, சப்ஸ்கிரைபரிடம் புகாருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களைக் கூறு வேண்டும் மேலும், ஒருவேளை சப்ஸ்கிரைபர் திருப்தி அடையாத பட்சத்தில் புகாரை மறுபரிசீலனை செய்ய சப்ஸ்கிரைபருக்கு நோடல் அதிகாரியின் பெயர் மற்றும் அவர் தொடர்பு எண்ணைக் கூற வேண்டும்.
புகார்களை நிவர்த்தி செய்வதற்கான கால அவகாசம்.— தொலைக்காட்சி சேனல்களின் ஒவ்வொரு டிஸ்ட்ரிபியூட்டரும் புகார்களை நிவர்த்தி செய்வதற்கான பின்வரும் கால வரம்பைக் கடைப்பிடிக்க வேண்டும்-
(a) பெறப்பட்ட அனைத்து புகார்களுக்கும் எட்டு மணி நேரத்திற்குள் பதில் அளிக்கப்பட வேண்டும்:
அலுவலக வேலை நேரங்களுக்குப் பிறகு பெறப்பட்ட புகார்களுக்கு அதற்கடுத்த வேலை நாளுக்குள் பதில் அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது;
(b) பெறப்பட்ட அனைத்து ‘நோ சிக்னல்’ புகார்களில் குறைந்தபட்சம் தொன்னூறு சதவீத புகார்கள் நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அத்தகைய புகார் பெறப்பட்ட இருபத்தி நான்கு மணிநேரங்களுக்குள் சிக்னலானது சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும்;
(c) பில்லிங் தொடர்பான அனைத்து புகார்களும் புகார் பெறப்பட்ட ஏழு நாட்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் மற்றும், ஒருவேளை ரீஃபண்ட் தொகை ஏதேனும் செலுத்த வேண்டியிருந்தால் புகார் பெறப்பட்ட முப்பது நாட்களுக்குள் சப்ஸ்கிரைபருக்கு ரீஃபண்ட் தொகையானது செலுத்தப்பட வேண்டும்;
(d) பிரிவு (b) மற்றும் பிரிவு (c) -யில் உள்ளடங்காத மற்ற புகார்களில் குறைந்தபட்சம் தொன்னூறு சதவீதமான புகார்களாவது அத்தகைய புகார்கள் பெறப்பட்ட நாற்பத்தி எட்டு மணிநேரங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டும்;
(e) பிரிவு (c)-இல் குறிப்பிடப்பட்டுள்ள பில்லிங் தொடர்பான புகார்களைத் தவிர வேறு எந்த புகாரும் இல்லை