• சுய உதவி

புதிய இணைப்புக்கான வழிமுறைகள்

புதிய இணைப்புக்கான வழிமுறைகள்.

(1) இணைப்பு வழங்கும் நேரத்தில் தொலைக்காட்சி சேனல்களின் ஒவ்வொரு டிஸ்ட்ரிபியூட்டரும் நுகர்வோரிடம் பொருந்தக்கூடிய சேவைகளின் முழு விவரங்கள், ஒரு மாதத்திற்கான அதிகபட்ச விலை மற்றும் ஆ-லா-கார்டே சேனல்கள் அல்லது பொக்கேகளின் ஒரு மாதத்திற்கான டிஸ்ட்ரிபியூட்டர் விலை, ஒரு மாதத்திற்கான நெட்வொர்க் கெப்பாசிட்டி கட்டணம் மற்றும் வாடிக்கையாளர் வளாகத்திற்கான உபகரணங்களின் விலை, பாதுகாப்பு டெபாசிட், வாடகை தொகை, பொருள் உத்தரவாதம்/சேவை உத்தரவாதம், பராமரிப்பு ஏற்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் வளாகத்தின் உபகரணங்களின் உரிமை போன்றவற்றைப் பற்றி விவரமாக கூற வேண்டும்.

(2) ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களின் டிஸ்ட்ரிபியூட்டரும் தொலைக்காட்சி தொடர்பான ஒளிபரப்பு சேவைகளை நுகர்வோருக்கு அவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட நுகர்வோர் விண்ணப்ப படிவம் (அட்டவணை- I)ஐ பெற்ற பிறகு, வாடிக்கையாளருக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையை வழங்குவதோடு, அந்த படிவத்தின் நகலை வாடிக்கையாளருக்கு வழங்குவார்.

(3) தொலைக்காட்சி சேனல்களின் ஒவ்வொரு டிஸ்ட்ரிபியூட்டரும் சப்ஸ்கிரைபர் மேனேஜ்மென்ட் சிஸ்டம் மூலம் ஒரு தனிப்பட்ட அடையாள எண் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு சப்ஸ்கிரைபருக்கும் வழங்கப்படும், அதைப் பயன்படுத்தி சப்ஸ்கிரைபருக்கு குறுஞ்செய்தி சேவை (எஸ்எம்எஸ்) மூலம் அவரின் பதிவுசெய்த மொபைல் எண்ணில் தொடர்புகொள்ளலாம் மற்றும் இமெயில், பி-மெயில் போன்ற பிற வழியிலும் தொடர்புகொள்ளலாம், மாதாந்திர பில் அல்லது பணம்செலுத்தல் ரசீதும் இதற்காக கருதப்படலாம்.

(4) நுகர்வோர் விண்ணப்ப படிவத்தின் விவரங்கள் சப்ஸ்கிரைபர் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தில் உள்ளிட்ட பிறகு தொலைக்காட்சி சேனல்களின் டிஸ்ட்ரிபியூட்டர் தொலைக்காட்சி தொடர்பான ஒளிபரப்பு சேவைகளை நுகர்வோருக்கு வழங்குவார்:

(5) நுகர்வோர் விண்ணப்ப படிவத்தின் விவரங்கள் சப்ஸ்கிரைபர் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தில் உள்ளிட்ட பிறகு தொலைக்காட்சி சேனல்களின் டிஸ்ட்ரிபியூட்டர் தொலைக்காட்சி தொடர்பான ஒளிபரப்பு சேவைகளை நுகர்வோருக்கு வழங்குவார்:

அத்தகைய சேவைகளை செயல்படுத்திய தேதியில் இருந்து தொலைக்காட்சி தொடர்பான ஒளிபரப்பு சேவைகளுக்கான கட்டணங்களை சப்ஸ்கிரைபர் செலுத்த வேண்டும்.

(6) தொலைக்காட்சி தொடர்பான ஒளிபரப்பு சேவைகளை வழங்குவதற்கான புதிய இணைப்பை நிறுவுவதற்காக முந்நூற்று ஐம்பது ரூபாய்க்கும் குறைவான தொகை ஒருமுறை-நிறுவுதல் கட்டணமாக தொலைக்காட்சி சேனல்களின் டிஸ்ட்ரிபியூட்டர் வசூலிக்கலாம்.

(7) தொலைக்காட்சி தொடர்பான ஒளிபரப்பு சேவைகளை செயல்படுத்துவதற்காக ஒருமுறை-செயல்படுத்தல் கட்டணமாக நூறு ரூபாய்க்கும் குறைவாக தொலைக்காட்சி சேனல்களின் டிஸ்ட்ரிபியூட்டர் கட்டணம் வசூலிக்கலாம்.