• சுய உதவி

இணைப்பு இடமாற்றம்

ஒரு இடத்தில் இருந்து வோறொரு இடத்திற்கு தனது இணைப்பை மாற்றுவதற்காக சப்ஸ்கிரைபர் கோரிக்கை விடுத்தால், அத்தகைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேதியில் இருந்து ஏழு நாட்களுக்குள் தொலைக்காட்சி சேனல்களின் டிஸ்ட்ரிபியூட்டர்கள், தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் செயலாக்கம், இணைப்பு இடமாற்றம் போன்றவற்றை செய்ய வேண்டும்:

இத்தகைய சந்தர்ப்பங்களில் சப்ஸ்கிரைபரிடமிருந்து டிஸ்ட்ரிபியூட்டர் கட்டணம் வசூலிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்-
(i) ஒருவேளை, அத்தகைய இணைப்பு இடமாற்றத்தின் போது, வாடிக்கையாளரின் பழைய இடத்திலிருந்து வெளிப்புற உபகரணத்தை அகற்றி புதிய இடத்தில் மறு நிறுவல் செய்ய நேர்ந்தால், நிறுவல் கட்டணத்திலிருந்து இரண்டு மடங்கு வரைக்குமான கட்டணம் டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் பரிந்துரைக்கப்படும், அல்லது

(ii) ஒருவேளை, அத்தகைய இணைப்பு இடமாற்ற வேலையின் போது, வாடிக்கையாளரின் பழைய இடத்திலிருந்து உபகரணத்தை அகற்ற வேண்டிய அவசியமில்லை என்றால், நிறுவல் கட்டணத்திற்கு நிகரான கட்டணம் டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் பரிந்துரைக்கப்படும்.